சட்ட திட்டங்கள்

குறிப்பு :- இதில் குறிப்பிட்டுள்ள எல்லாச் சட்ட திட்டங் களையும் ஒவ்வொரு மாணவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இவை எல்லாவற்றையும் படித்துவிட்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் ஒப்புதல் கையொப்பம் இடவேண்டும். இல்லாவிடில் அவரை கல்லூரியிலிருந்து நீக்க கல்லூரி முதல்வருக்கு அதிகாரம் உண்டு. சேர விரும்பும் மாணவர் பழையவராயினும் புதியவராயினும் விண்ணப்ப மனுவைப் பூர்த்தி செய்யவேண்டியது அவசியம்.

  1.  ஐந்து நேரமும் தக்பீர் தஹ்ரீமாவுடன் இமாம் ஜமாஅத் துடன் தொழ வேண்டியது கண்டிப்பான கடமையாகும், ஒன்றிரண்டு தடவை ஜமா அத்தில் சேராவிட்டால் எச்சரிக்கை செய்யப்படும். பின்பும் மாற்றமாக நடந்து கொண்டால் நீக்கப் படுவார்கள்.
  2. ஒவ்வொரு மாணவரும் சுப்ஹு தொழுகைக்குப் பின் தஜ்வீது தர்த்தீல் முறைப்படி குர்ஆன் ஷரீஃபில் ஒரு ஜூஸ்உ ஓதவேண்டியது அவசியமாகும். அதனை ஓர் ஆசிரியர் மேற் பார்வை செய்வார்.
  3. ஷவ்வால் பிறை 11 அன்று கல்லூரி ஆரம்பமாகும். புதிய மாணவர் பிறை 11 க்கு முன்பும் பழைய மாணவர் 16க்கு முன்பும் கல்லூரிக்கு வந்து சேர வேண்டும். அல்லது முதல்வர் அறிவிக்கும் நாளன்று வரவேண்டும்.
  4. இஸ்லாமியச் சின்னத்துடன் இருப்பது அவசியம். அதாவது ஒரு பிடி தாடி வைப்பதும் மீசையைக் குறைப்பதும் ஹ்னபி, ஷாபி. ஆகிய எல்லா மாணவருக்கும் அவசியமாகும்.
  5. கல்லூரியில் சண்டை, சச்சரவு ஆகியவற்றில் ஈடு படுவது கண்டிப்பாகக் கூடாது. அவ்வாறு தவறு ஒன்றை ஒருவரிடம் கண்டால் முதல்வரிடமோ ஆசிரியர்களிடமோ அதனைக் கூறவேண்டும். மாறாக, தானே அதற்குத் தீர்ப்புச் செய்ய எவருக்கும் அதிகாரம் கிடையாது.
  6. மாணவர்கள் மஃக்ரிபு முதல் இஷா வரையிலும் இஷாவுக்குப் பின் 10-30 மணி வரையிலும் கல்லூரி அரங்கில் பாடம் பார்ப்பது அவசியமாகும். அதனை ஓர் ஆசிரியர் மேற்பார்வை செய்வார்; வருகை எடுக்கப்படும். 
  7. மாணவர்கள் தங்கள் பாடங்களுக்குத் தவறாமல் சென்று வருவது அவசியமாகும்.  அதிகமான அளவில் பாடங் களுக்குச் செல்லா தவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிப்பதற்கும், அல்லது அவர்களை கல்லூரியிலிருந்து தீக்குவதற்கும் முதல்வருக்கு உண்டு.
  8. பாடத்திற்குச் செல்லமுடியாத அளவு மாணவர் நோயாளியாக இருந்தால் பாட நேரத்திற்கு முன்பே. தானோ. வேறு மாணவர் மூலமாகவோ ஆசிரியருக்கு அறிவித்து விட வேண்டும். படுவார். இல்லாவிடில் அவர் வராதவராகவே கருதப்பெடுவார்.
  9. மாலையில் உலவச் செல்லும் மாணவர்கள் பாகியாத் மஸ்ஜிதில் அஸர் தொழுக வேண்டும். மஃக்ரிபுத் தொழுகைக்கு பாகியாத் மஸ்ஜிதுக்கு வந்து விடவேண்டும். இதனைப் பேணி நடப்பது அவசியமாகும்.
  10. புகையிலை உபயோகிப்பது (பீடி, சிகரெட் பிடிப்பது) கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கல்லூரி யின் வளாகத்தில் எங்கே மாணவர் புகை பிடித்ததாகக் காணப் பட்டாலும் உடனடியாக அவர் கல்லுாரியிலிருந்து நீக்கப்படு வார்.
  11. செல்போனை உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பெற்றுள்ளது , மாணவர்களுக்கு அவ்விஷயமான வசதிகள் ஸ்தாபனத்தில் இருந்தும் செய்யப்பெடும்