வகுப்புகள்

எங்கள் நிறுவனத்தின் அடிப்படைப் பாடநெறி 10 வருட நீண்ட பாடமாகும், இதில் முதல் ஆண்டு பாரசீக உருது மொழிகளில் புத்தகங்கள் கற்பிக்கப்படுகின்றன, அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இடைநிலைக் கல்வி ஆலிம் பாடநெறி மற்றும் நிகா பாகவி பட்டம் ஆகியவற்றை முடிக்க வழிவகுத்தது. அதன் பிறகு உயர்கல்விக்காக ஃபால் கோர்ஸ் எனப்படும் இரண்டு வருட படிப்பு தயாரிக்கப்பட்டு, அதை முடிப்பவர்களுக்கு ஃபாசில் பாகவி பட்டம் வழங்கப்படுகிறது.

இது 2 வருட முழுமையான படிப்பாகும். இந்த படிப்பை பூர்த்தி செய்பவர்கள் பாஸில் பாகவி பட்டம் பெறுகிறார்கள். சிஹாஹுஸ் ஸித்தா எனும் ஹதீஸ்களின் ஆறு பெரும் கிதாபுகள் பயிற்றுவிக்கப்படுவதுடன் முஅத்தா இமாம் மாலிக், ஷரஹ் மஆனியுல் ஆஸார் ஆகிய ஹதீஸ் கித்தாபுகள் போன்ற மஃன்கூலாத் கலைகளுடன் மஃகூலாத் எனும் அறிவு சார் கலைகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்த போதிக்கப்படுகிறது.
எமது ஸ்தாபனத்தின் பாடத்திட்டத்தின் படி ஏழு ஆண்டுகள் கற்பிக்கப்படும் நூல்களை கற்று முடித்த மௌலவி ஆலிம்கள் மட்டுமே (நுழைவுத் தேர்வுக்கு பின்) இதில் சேர்க்கை பெறுவார்கள்.

இது 1 வருட  படிப்பாகும். இந்த படிப்பை முடித்தவர்களுக்கு பாகவி ஆலிம் பட்டம் வழங்கப்படுகிறது. தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ், இவைகளின் உஸுல்கள் , அரபி இலக்கண இலக்கியங்கள், கணிதம், பாகப்பிரிவினையின் சட்டம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. எமது ஸ்தாபனத்தின் பாடத்திட்டத்தின் படி 6 ஆண்டுகள் கற்பிக்கப்படும் நூல்களை கற்று முடித்தவர்கள் மட்டுமே இதில் சேர்க்கை பெறுவார்கள்.

ஹனபி , ஷாஃபி மத்ஹபின் பிரத்தியேகமான சட்ட நூல்கள் இன்னும் மார்க்கத் தீர்ப்பு என்னும் ஃபத்வாவின் அடிப்படையான விஷயங்கள் சம்பந்தப்பட்ட நூல்களும் போதிக்கப்படுகின்றன. எமது ஸ்தாபனத்தில் முக்தஸர்
அல்லது முத்தவ்வல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதில் சேர்க்கப்படுவார்கள்.

திருக்குர்ஆனை ஆழமாகப் புரிந்துகொண்டு, ஓதுதல் விதிகளை முழுமையாகப் பின்பற்றி, தஜ்வீதுடன் குர்ஆனின் பாணிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மாணவர் சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.இந்த நிறுவனத்தில் சனத் பெற்றவர்கள் மற்றும் மற்ற நிறுவனங்களில் சனத் பெற்றவர்கள் அதில் சேர்க்கப்படுவார்கள் ஒரே நிபந்தனை அவர்கள் ஏழு வருடங்கள் ஓதி முடித்து ஆலிம் சனத்தை பெற்றிருக்க வேண்டும்.

தொடர்ப்பு கொள்ளவும்

உங்களிடம் ஏதேனும் விசாரணைகள் இருந்தால்,படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்

நாம் திரும்பப் பெறுவோம்.

Leave A Message

And we will get back to you soon!