அறிவைத் தேடும் மாணவர் சமூகத்திற்கு உயர்தரக் கல்வியை வழங்குவதே எங்கள் இலக்கு. ஒவ்வொரு மாணவரின் ஆளுமையிலும் தனித்துவமான திறமைகள் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே
கல்வியில் பேராசையுள்ள மாணவர்களுக்கு நாங்கள் ஊக்கமும் ,ஆதரவும் அளித்து அவர்களின் பேராசை நிறைவேறுவதில் உறுதுணையாக இருப்போம்.
சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் சமூகத்தை வழிநடத்தும் தொலைநோக்கு திறன் கொண்ட அறிவார்ந்த அறிஞர் சமூகத்தை உருவாக்குவதே இந்த ஸ்தாபனத்தின் முக்கிய நோக்கமாகும். ஆகையால் இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவரிடமும் இருக்கும் சிறந்த திறனை வெளிக்கொணர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நமது மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதோடு, உயர்ந்த ஆன்மீகத் வழிகாட்டுதலையும் இந்த ஸ்தாபனம் வழங்குகிறது, நல்லோர்களான முன்னோர்கள் நமக்குக் கொடுத்த ஆத்மீக ஜோதியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது இன்னும் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான கல்வியை எளிதாகவும் நவீனமாகவும் வழங்குவது எங்கள் [பொறுப்பாகும் , எனவே நமது ஜாமியா எதிர்கால சந்ததியினருக்கு சரியான தேர்வாகும்.
இது 170 வருட பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் ஒரே நிறுவனம் , மேலும் தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான மார்க்க நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வழித்தோன்றல்களே.
எங்களுடையது ஒரு சிறந்த மற்றும் குறைபாடற்ற கற்பித்தல்-போதனா முறையாகும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் 100% கவனம் செலுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்
நாங்கள் கல்விக்கு மட்டுமின்றி ஆன்மீக ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம், ஆகையால் மாணவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அவர்களை சிறந்த ஆன்மீக வாதிகளாக வார்த்தெடுக்கிகின்றோம் .